உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு பரிசளிப்பு

மாணவர்களுக்கு பரிசளிப்பு

கடலுார் : தமிழ்நாடு பிராமணர் சங்க கடலுார் மஞ்சக்குப்பம் கிளை சார்பில் குடியரசு தினத்தையொட்டி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.மஞ்சக்குப்பத்தில் நடந்த விழாவிற்கு, சங்க துணை தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். உறுப்பினர் கோதண்டராமன் முன்னிலை வகித்தார். தேச தலைவர்கள் குறித்த பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாநில தலைவர் திருமலை பரிசு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கி பாராட்டினார்.அப்போது, ஜவகர் சிறுவர் மன்ற ஓவிய ஆசிரியர் மனோகரன், சங்க உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். உறுப்பினர் ராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி