மேலும் செய்திகள்
முதியவர் மீது 'போக்சோ' வழக்கு
04-Nov-2024
கடலுார் : சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக வாலிபர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.கடலுார், திருவந்திபுரத்தை சேர்ந்தவர் முருகன் மகன் குமரகுரு, 20; இவரும், 17 வயது சிறுமியும் காதலித்தனர். இருவரும் நெருங்கி பழகியதில், சிறுமி 2 மாதம் கர்ப்பம் ஆனார். இதனால், குமரகுருவிற்கு அவரது குடும்பத்தினர் சிறுமியை திருமணம் செய்து வைத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து குமரகுரு, அவரது தாய் முனியம்மா, ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.
04-Nov-2024