உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தங்கப் பதக்கம் வென்ற கான்ஸ்டபிளுக்கு பாராட்டு

தங்கப் பதக்கம் வென்ற கான்ஸ்டபிளுக்கு பாராட்டு

கடலுார் : கமாண்டோ பயிற்சியில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆயுதப்படை போலீஸ்காரரை எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டினார்.கடலூர் மாவட்ட காவல் ஆயுதப்படை பிரிவு போலீஸ்காரர் வெங்கடகிருஷ்ணராவ், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கமாண்டோ பயிற்சி பள்ளியில் 8 வாரம் கமாண்டோ சிறப்பு பயிற்சியில் பங்கேற்றார். வெங்கடகிருஷ்ணாராவ் கமாண்டோ பயிற்சியில் துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற போலீஸ் வெங்கட கிருஷ்ணாராவை கடலூர் எஸ்.பி., ஜெயக்குமார், நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !