உதயநிதி பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
கடலுார்: துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று பிறந்த 5 குழந்தைகளுக்கு மாநகர மேயர் தங்க மோதிரம் பரிசளித்தார்.தமிழக துணை முதல்வரும், தி.மு.க., இளைஞரணி செயலாளருமான உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கும் நிகழ்ச்சி கடலுாரில் நேற்று நடந்தது. மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மேயர் சுந்தரி ராஜா, நேற்று காலை பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தும், அவர்களது பெற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தொழில்நுட்ப அணி கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் சங்கீதா, இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.