உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் நிலையத்தில் பொன்விழா கொண்டாட்டம்

வேளாண் நிலையத்தில் பொன்விழா கொண்டாட்டம்

விருத்தாசலம்; விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், பொன்விழா ஆண்டு ஒளி தீப விழா கொண்டாட்டம் நடந்தது.விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் அங்கக மற்றும் இயற்கை வேளாண்மை கருத்தரங்கு நடந்தது. இதனை கோவை பல்கலைக் கழக விரிவாக்க இயக்குநர் முருகன் காணொளி காட்சியில் துவக்கி வைத்தார். மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் வரவேற்றார்.பேராசிரியர்கள் கண்ணன், சுகுமாறன், பாரதிகுமார், காயத்ரி, கலைச்செல்வி ஆகியோர் தொழில் நுட்பங்கள் குறித்து பேசினர். பண்ணை மேலாளர் குமார், தொழில்நுட்ப உதவியாளர்கள் விஜயலட்சுமி, மீனலட்சுமி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.நபார்டு வங்கி மேலாளர் சித்தார்த்தன் புது இயற்கை வேளாண்மை மற்றும் பதப்படுத்தும் செயல்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். கூட்டத்தில் 110க்கும் மேற்பட்ட விவசாயிகள், உழவர் சங்க தலைவர்கள் பலர் பங்கேற்றனர். மேலும் வேளாண் மத்திப்புக்கூட்டப்பட்ட விளைபொருட்களின் கண்காட்சி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி