உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதிய வழித்தடத்தில் அரசு பஸ் அமைச்சர் துவக்கி வைப்பு

புதிய வழித்தடத்தில் அரசு பஸ் அமைச்சர் துவக்கி வைப்பு

சிறுபாக்கம்; சிறுபாக்கம் அடுத்த ரெட்டாக்குறிச்சியில் புதிய வழித் தடத்தில் அரசு பஸ்சை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் மாவட்டம், போக்குவரத்துத்துறை பொது மேலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார் மங்களூர் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சின்னசாமி, அமிர்தலிங்கம், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் சங்கர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் அரசு பஸ்சை துவக்கி வைத்தார். போக்குவரத்து கழக துணை மேலாளர் ஹரிவள்ளல், வேப்பூர் தாசில்தார் மணிகண்டன், தி.மு.க., நிர்வாகிகள் நிர்மல், ராமதாஸ், வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை