உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரவு நேர பாராக மாறிய அரசு பஸ் தொழிலாளர்கள் கப்சிப்: பயணிகள் அவதி

இரவு நேர பாராக மாறிய அரசு பஸ் தொழிலாளர்கள் கப்சிப்: பயணிகள் அவதி

க டந்த வாரம் சிதம்பரத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை செல்லும் பஸ்சில் கடலுாரில் 4:30 மணிக்கு சில பயணிகள் ஏறினர். பஸ்சில் 50 பிளஸ் வயதுடைய நடத்துனர், டிரைவர்கள் பணியில் இருந்தனர். சென்னை செல்லும் பஸ் ஆச்சே. சிறிய பஸ் ஸ்டாப்புகளில் நிற்காது என்று பயணிகள் கருதியது தவறானது. அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் என வழி நெடுக சிறு சிறு ஸ்டாப்பிங்கில் எல்லாம் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி சென்றனர். புதுச்சேரியை விட்டு வெளியே சென்றதும் பகல் மறைந்து இரவு வந்தது. பஸ்சில் 75 சதவீத பயணிகள் மட்டுமே இருந்தனர். உடனே சில பயணிகள் புதுச்சேரியில் பஸ் நின்றிருந்த போது, வாங்கி வந்த மதுபாட்டில்களை மற்ற பயணிகள் இருக்கிறார்கள் என்பதைக்கூட யோசிக்காமல் பாட்டிலை திறந்து 'யூஸ் அண்டு த்ரோ' கப்பில் தண்ணீரை கலந்து மகிழ்ச்சியாக மது அருந்தினர். காதல் ஜோடி பின்பக்கமாக காலியாக இருந்த சீட்டில் உட்கார்ந்தபடி சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இப்படி தனி மனித சுதந்திரத்தையெல்லாம் பஸ்சில் பயன்படுத்தினால், மற்றவர்களின் மனநிலை பாதிக்கும் என்பதை பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. பஸ் தொழிலாளர்கள் முன்புற சீட்டில் அமர்ந்து 'வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ' என இருந்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு, விதிமுறைக்குட்பட்டு பயணம் செயற்வதற்காகதான் அரசு பஸ்சை நாடுகின்றனர். அதில் கூட பஸ் தொழிலாளர்கள் கண்டு கொள்ளாமல் சென்றால் எப்படி என சில பயணிகள் கேள்வி எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ