உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அரசு துறை ஓட்டுநர்கள் சங்க செயற்குழு கூட்டம்

 அரசு துறை ஓட்டுநர்கள் சங்க செயற்குழு கூட்டம்

கடலுார்: கடலுார் மாவட்ட அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், நிர்வாகிகள் கார்மேகம், அந்தோணிராஜா, ஞானம், ரவிசந்திரன், ரமேஷ், பழனிசாமி, சக்திவேல், அப்பாசாமி, தேவதாஸ், ஆலோசகர்கள் ராஜன், மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். தலைமைச் செயலக ஓட்டுநர்களுக்கு வழங்கப்படுவது போல் மாநிலம் முழுதும் கல்வித்தகுதிக்கு ஏற்ப பணி மாறுதலில் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் மட்டுமே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் 26ம் தேதி நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை