உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பழைய பென்ஷன் கோரி அரசு ஊழியர்கள் போராட்டம்

பழைய பென்ஷன் கோரி அரசு ஊழியர்கள் போராட்டம்

கடலுார்: கடலுாரில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்கள், கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலுார் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், பென்ஷன் வழங்க வேண்டும். அரசு காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுாரில், அரசு ஊழியர்கள் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு மருத்துவமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வெங்கடாஜலபதி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.மாவட்ட நிர்வாகிகள் கவியரசு, பாஸ்கரன், வெங்கடேசன், ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மருத்துவத் துறை நிர்வாக ஊழியர் சங்கம் சண்முகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ