உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவி பாலியல் பலாத்காரம் அரசு பள்ளி ஆசிரியர் கைது

மாணவி பாலியல் பலாத்காரம் அரசு பள்ளி ஆசிரியர் கைது

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே அரசு பள்ளியில் மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியரை அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ'வில் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடந்தாண்டு பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற 17 வயது மாணவி ஒருவர், தற்போது சென்னையில் பி.எஸ்சி., நர்சிங் படித்து வருகிறார்.இந்நிலையில் அந்த மாணவிக்கு நான்கு நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்தபோது, மேல்நிலை பள்ளியில் படித்தபோது வேதியியல் ஆசிரியர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். மாணவியின் பெற்றோர் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ரேவதி விசாரணை நடத்தினார். அதில், புடையூர் காலனியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் மலர்செல்வன்,50, என்பவர் மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஆசிரியர் மலர்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு திருமணமாகி, மனைவி, இரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி