உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடி பிரியர்கள் கூடாரமாக அரசு அலுவலகங்கள்

குடி பிரியர்கள் கூடாரமாக அரசு அலுவலகங்கள்

விருத்தாசலத்தில், கடலுார் சாலையில் மத்திய கூட்டுறவு வங்கி, அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, ஸ்டேட் பாங்க், மார்க்கெட் கமிட்டி, ஒன்றிய அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், மண்டல ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன.இச்சாலையில், பாலக்கரை முதல் மார்க்கெட் கமிட்டி வரை 4 டாஸ்மாக் கடைகள் ஒரு தனியார் பார் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் குடிப்பிரியர்கள், சரக்கு வாங்கி கொண்டு, ஒன்றிய அலுவலகம், மார்க்கெட் கமிட்டி, தாலுகா அலுவலகம் என அரசு அலுவலக வாளாகத்திற்குள் சென்று குடித்துவிட்டு, காலி பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.மேலும், சில அரசு ஊழியர்களும் அலுவலக வளாகத்தில் இரவு நேரங்களில் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அரசு ஊழியர்களும், குடி பிரியர்களும் இரவு நேரங்களில் அரசு அலுவலகங்களை பாராக மாற்றி வருவதால், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேதனையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ