உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டெட் தேர்விற்கு விலக்கு வேண்டும்; பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

டெட் தேர்விற்கு விலக்கு வேண்டும்; பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

விருத்தாசலம்; அனைத்து அரசு பட்டதாரி, இடைநிலை ஆசிரிய ர்களுக்கும், டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் வெற்றிவேல் தலைமையிலான நிர்வாகிகள், நேற்று கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத்தை சந்திந்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், கடந்த 2012ம் ஆண்டிற்கு முன் பணியில் அமர்த்தப்பட்ட அனைத்து அரசு பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கும், டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். வரும் குளிர்கால கூட் டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட எம்.பி., பாராளுமன்ற, கூட்டத்தொடரில் பேசி அரசின் கவனத்தை ஈர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ