உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூட்டுறவு பயிற்சி மையத்தில் பட்டமளிப்பு விழா

கூட்டுறவு பயிற்சி மையத்தில் பட்டமளிப்பு விழா

கடலுார்: கடலுார் டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2023-24ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கு, பட்டமளிப்பு விழா நடந்தது.கடலுார் மாவட்ட மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, பட்டங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில், 2023-24ம் ஆண்டு முழுநேர பட்டய பயிற்சி பெற்ற 85 பேரும் தேர்ச்சி பெற்றனர். அதில், ஒரு பெண் பயிற்சியாளர் மாவட்டத்தில் முதலிடமும், 56 பேர் முதல் வகுப்பிலும், 28 பேர் இரண்டாமிடத்திலும் தேர்ச்சி பெற்றனர்.அப்போது, சரக துணைப்பதிவாளர் துரைசாமி, பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் இம்தியாஸ், மேலாண்மை நிலைய முதல்வர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை