உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராகவேந்திரா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

ராகவேந்திரா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

சிதம்பரம் : சிதம்பரம் ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வெள்ளி விழா ஆண்டு மற்றும் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். கல்லுாரி செயலர் பாபு வரவேற்றார். முதல்வர் மாலதி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக காந்தி கிராம் பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநதம் பங்கேற்று 1,078 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். பின், அவர் பேசுகையில், 'மாணவர்கள் விடாமுயற்சியுடன், தனித் திறன்களை வளர்த்துக் கொண்டு முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும். சாதனையாளர்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள வேண்டும்' என்றார். துணைத் தலைவர் அசோக் சுவாமிநாதன், நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன், கல்லுாரி நிர்வாக ஆலோசகர் கனகசபை, கல்வி ஆலோசகர் முத்து வரதராஜன், நாக் கமிட்டி ஆலோசகர் தியாகேசன், கல்வி அதிகாரி அசோக்குமார் மற்றும் பேராசிரியர்கள், துறை தலைவர்கள், ராகவேந்திரா இதர கல்விக்குழும ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ