உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பழவகை கன்றுகளில்  ஒட்டுகட்டும் பயிற்சி

 பழவகை கன்றுகளில்  ஒட்டுகட்டும் பயிற்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு தோட்டக்கலை பண்ணையில், ஒட்டுகட்டும் முறைகள் குறித்து பயிற்சி நடந்தது. திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய, நான்காம் ஆண்டு மாணவிகள், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி, வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர். அதில், விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பழவகை கன்றுகளில் ஒட்டுகட்டும் முறை குறித்து பயிற்சி நடந்தது. மாணவிகள் சங்கவி, மற்றொரு சங்கவி, சரயு, ஸ்ரீநிதி, சுபாஷினி, சுஜா, ஸ்வேதா, வாகீஸ்வரி, வினிதா, யமாவதி ஆகியோர் மா, முந்திரி, கொய்யா, பலா கன்றுகளில் ஒட்டுகட்டும் முறைகள், அவற்றின் விலை, விற்பனை முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ