மேலும் செய்திகள்
அக்.2ல் கிராமசபை கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவு
29-Sep-2024
கடலுார், : கடலுார் மாவட்டத்தில் அக்., 2 ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில், காந்தி ஜெயந்தியொட்டி, அக்., 2 ம் தேதி காலை 11:00 மணியளவில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றியும், மதசார்புள்ள இடத்தில் நடத்தாமல் பொதுவான இடங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில கூட்டம் நடத்த வேண்டும். இடம், நேரம் குறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்கு ஊராட்சி தலைவர்கள் தெரிவிக்க வேண்டும்.இக்கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளின் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
29-Sep-2024