உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிராம சபை கூட்டம் : அமைச்சர் பங்கேற்பு

கிராம சபை கூட்டம் : அமைச்சர் பங்கேற்பு

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, வெண்கரும்பூர் பழைய காலனிக்கு திருவள்ளுவர் நகர் என்றும்; புதிய காலனிக்கு பாரதியார் நகர் என்றும் பெயர் வைத்தார். தொடர்ந்து, பழைய காலனிக்கு சிமென்ட் சாலை மற்றும் மேல்நிலை தொட்டிக்கு புதிய மோட்டார் அமைக்கப்படும். புதிய காலனிக்கு வடிகால் வாய்க்கால் ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்தார். கூடுதல் கலெக்டர் பிரியங்கா, ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா, ஊரக வளர்ச்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ