உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் சிக்னல்களில் பசுமை நிழற்பந்தல் தேவை

கடலுார் சிக்னல்களில் பசுமை நிழற்பந்தல் தேவை

கடலுார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், காலை 11:00 மணிக்குமேல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்வதற்கே அச்சப்படுகின்றனர். கொளுத்தும் வெயிலில் போக்குவரத்து சிக்னல்களில், இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சென்னை, புதுச்சேரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிக்னலில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில், போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் சிக்னல்களில் பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பசுமை நிழற்பந்தல் நிழலில், வாகன ஓட்டிகள் சில நிமிடங்கள் இளைப்பாறிவிட்டு செல்கின்றனர். ஆனால், கடலுார் மாநகராட்சியில் பசுமை நிழற்பந்தல் அமைக்காததால், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் வெயிலில் தவித்து வருகின்றனர். எனவே, கடலுார் மாநகராட்சியில் உள்ள பிரதான சிக்னல்களில் பசுமை நிழற்பந்தல் அமைக்க காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி