மேலும் செய்திகள்
12 முதுநிலை வருவாய் ஆய்வாளர் நியமனம்
25-Sep-2025
கடலுார் : ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி 2-ஏ தேர்வில் தேர்ச்சி பெற்று உதவியாளர் பணியில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணி நாடுநர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட உள்ளதால் உரிய சான்றுகளுடன் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்லப்பன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 2- ஏ, தேர்வில் தேர்ச்சி பெற்று உதவியாளர் பணிக்கு பள்ளிக் கல்வித்துறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணி நாடுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. அதன்படி, கடலுார் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணைய வழியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது. இதன் காரணமாக பணி நாடுநர்கள் நாளை 6ம் தேதி காலை 8:00 மணிக்கு அனைத்து கல்வி சான்றுகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
25-Sep-2025