உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலிகம்பருக்கு குருபூஜை விழா

கலிகம்பருக்கு குருபூஜை விழா

பெண்ணாடம்: பெண்ணாடம், கிழக்குரத வீதியில் உள்ள கலிகம்ப நாயனார் மடாலயக் கோவிலில் குருபூஜை விழா நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 9:00 மணியளவில் திருமுறை பாராயணம், 9:30 மணியளவில் யாக பூஜை, பகல் 11:00 மணியளவில் கலிகம்ப நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம், 1;00 மணியளவில் மகேஸ்வர பூஜை, அடியார் திரு அமுது ஏற்றல், 1:30 மணியளவில் மகாதீபாராதனை நடந்தது. துளசி மாலை அலங்காரத்தில் கலிகம்ப நாயனார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, இரவு 8:00 மணியளவில் சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ