உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மண்ணோடு மண்ணாக மக்கி... வீணாகும் ஜிப்சம் உர மூட்டைகள்

மண்ணோடு மண்ணாக மக்கி... வீணாகும் ஜிப்சம் உர மூட்டைகள்

திட்டக்குடி அடுத்த பட்டூரில், மங்களூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் இயங்கி வருகிறது. வட்டாரத்தில் உள்ள 66 ஊராட்சிகள், 30 துணை கிராமங்களில் சிறு, குறு விவசாயிகள் நெல், மணிலா, கேழ்வரகு பயிர்களையும்; போர்வெல் பாசன விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களான மஞ்சள், மரவள்ளி, காய்கறிகள், பூக்கள், வாழை உள்ளிட்ட பயிர்களையும் சாகுபடி செய்வது வழக்கம்.ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்த பயிர்களுக்கு விதைகள், உரம், பூச்சி மருந்துகள், உயிர் உரங்கள் ஆகியவற்றை மானிய விலையில் வாங்கி, பயனடைந்து வருகின்றனர்.அதன்படி, பட்டூரில் உள்ள மங்களூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில், கலைஞர், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 50 கிலோ எடையுள்ள 1 மூட்டை ஜிப்சம் 136 ரூபாய்க்கு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வந்திறங்கின. ஆனால் அவைகள் குறைந்தளவு மட்டுமே விற்கபட்டு, மீதமுள்ளவைகளை சரிவர பராமரிக்காததால் அரசு நிதி பாழாவதுடன், மண்ணோடு மண்ணாக வீணாவதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.எனவே, பட்டூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வீணாகும் ஜிப்சம் மூட்டைகளை, கலெக்டர், மாவட்ட வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை