மாவட்ட பள்ளிகளில் அரையாண்டு தேர்வு
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு நேற்று துவங்கியது.பெஞ்சல் புயலால் கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால், கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் டிச., மாதம் நடைபெறவிருந்த பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இத்தேர்வு ஜன., 2 முதல் 10ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை, கடலுார் மாவட்டத்திற்கும் தேர்வு நடைபெறுவதற்கு முன் விடப்பட்டது.விடுமுறை முடிந்து நேற்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் நேற்று அரையாண்டு தேர்வு துவங்கியது. இதில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 2,232 பள்ளிகளில் நேற்று அரையாண்டு தேர்வு நடந்தது.