உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருடுபோன மொபைல் போன்கள் ஒப்படைப்பு

திருடுபோன மொபைல் போன்கள் ஒப்படைப்பு

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் திருடுபோன மொபைல் போன்களை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.பெண்ணாடம் போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களில், 3 மொபைல் போன்கள் திருடு போனதாக மாவட்ட 'சைபர் க்ரைம்' போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, எஸ்.பி., உத்தரவின்படி, 'சைபர் க்ரைம்' போலீசார் காணாமல் போன மொபைல் போன்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.அப்போது திருடு போன மொபைல்கள், பெண்ணாடம் பகுதிகளில் உள்ள சிலர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. 3 மொபைல் போன்களை மீட்டு, பெண்ணாடம் போலீசில் ஒப்படைத்தனர். அதனை, சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், உரியவர்களிடம் நேற்று ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை