உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஹான்ஸ் விற்பனை: 3 பேர் கைது

ஹான்ஸ் விற்பனை: 3 பேர் கைது

திட்டக்குடி; திட்டக்குடி, பெண்ணாடம் பகுதியில் ஹான்ஸ் விற்பனை தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திட்டக்குடி அடுத்த கோழியூர் முத்துக்குமரன், 52; பெரியார் நகர் ராஜபாண்டி, 32; இருவரும் சேர்ந்து முத்துக்குமரன் வீட்டில் ஹான்ஸ் பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கி டைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் முத்துக்குமரன் வீட்டில் சோதனை செய்தபோது, அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த 36 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், முத்துக்குமரன், ராஜபாண்டி ஆகிய இருவரை கைது செய்தனர். இதேபோல், பெண்ணாடத்தில் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் , தெற்குரத வீதியில் உள்ள அருள்செல்வன், 28; என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது, அரசு அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த 3 கிலோ 470 கிராம் எடையிலான ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறி மு தல் செய்து, அருள்செல்வனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை