மேலும் செய்திகள்
அரசு துவக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா
27-Mar-2025
சேத்தியாத்தோப்பு: கீரப்பாளையம் ஒன்றியத்தில் அரசு துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.வட்டார கல்வி அலுவலர்கள் மணிவாசகன், கலைச்செல்வி தலைமை தாங்கினர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.கொங்கராம்பாளையம், இடையன்பால்சொரி, பரிபூரணநத்தம், வெய்யலுார், அ.புளியங்குடி, சக்திவிளாகம், கண்ணங்குடி, வடப்பாக்கம், துணிசிரமேடு, சி.வீரசோழகன் ஊராட்சி துவக்கப் பள்ளிகள், பரதுார், சி.சாத்தமங்கலம், கே.ஆடுர், கீழ்நத்தம் ஆகிய அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.துவக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களை 100 நாளில், 100 சதவீதம் கற்றல், வாசித்தல் மற்றும் எழுதுதல் பணியை சிறப்பாக செய்ய வேண்டுமென, வலியுறுத்தப்பட்டது.
27-Mar-2025