மேலும் செய்திகள்
கடலுாரில் 13.2 மி.மீ., மழை
31-Oct-2024
கடலுார் ; கடலுார் பகுதியில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.கடலுார் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி, வானமாதேவி 91.22, கலெக்டர் அலுவலகம் 76.83, எஸ்.ஆர்.சி., குடிதாங்கி 73.4, கடலுார் 68.65, பண்ருட்டி 67.06, கே.எம்.,கோவில் 61.37, லால்பேட்டை 49.28, வடகுத்து 40.09, பரங்கிப்பேட்டை 29.61, குறிஞ்சிப்பாடி 27.01, கொத்தவாச்சேரி மற்றும் விருத்தாசலம் தலா 21.01, புவனகிரி 19.01, பெலாந்துறை 16.21, குப்பநத்தம் 14.61, அண்ணாமலை நகர் 14.01, ஸ்ரீமுஷ்ணம் 13.11, கீழ்சிறுவை 12.01, சேத்தியாதோப்பு 10.02, தொழுதுார் 9.02, சிதம்பரம் 7.82, மேமாத்துார் 7.02, லக்கூர் 3.02, வேப்பூர் 3.02, என மாவட்டத்தில் மொத்தம் 754.40 மி.மீ., மழை பதிவாகியது.கடலுார் பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கியது. கடலுார் வண்ணாரப்பாளையம், கே.கே.,நகர், பாரதி நகரில் சாலைகளில் அதிகளவில் மழைநீர் தேங்கி வீட்டிற்குள் மழைநீர் உள்ளே புகுந்தது. இதேபோன்று, கடலுார் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம் பகுதியிலும் குடியிருப்பு பகுதிகளில் மழை சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
31-Oct-2024