பாலம் அருகே கனரக வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து அபாயம்
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பாலம் அருகே கனரக வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து அபாயம் உள்ளது. விருத்தாசலம்-பரங்கிபேட்டை சாலை வழியாக சேலம், வேலுார், திருவண்ணாமலை, கோயம்புத்துார், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி கார்கள், கனரக லாரிகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்கிறது. இந்த சாலையில் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு, வி.கே.டி., சாலையில் பாலம் அருகே சாலையின் இருபுறமும் லோடு ஏற்றி வரும் லாரிகள் அதிகளவில் நிறுத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் அதிக க னரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாலம் அருகே வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.