உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ெஹல்மெட் அவசியம் எஸ்.பி., அறிவுரை

 ெஹல்மெட் அவசியம் எஸ்.பி., அறிவுரை

கடலுார்: இருசக்கர வாகனத்தில், வெளியில் செல்லும் பொழுது ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என, என பொதுமக்களுக்கு எஸ்.பி., ஜெயக் குமார் அறிவுறுத்தினார். கடலுார் அண்ணா பாலம் உள்ளிட்ட நகரப் பகுதியில் புதிய போக்குவரத்து சிக்னல்களை எஸ்.பி., ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: மாவட்டத்தில் பழுதடைந்த சி.சி.டி.வி., கேமராக்கள், மற்றும் புதிய இடங்களில் கேமராக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலீஸ்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வரும் நிலையில் அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாததால் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பொதுமக்கள் மொபைல் போன்களை கையில் மொபைல் வைத்திருப்பது போல இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது, ஹெல்மெட் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை