அதிக மின் அழுத்தம்: பொதுமக்கள் பாதிப்பு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே அதிக மின் அழுத்தம் காரணமாக மின் சாதன பொருட்கள் சேதமடைந்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளைம் சுமையா நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஒவ்வொரு வீடுகளில் கடந்த ஆறு மாதங்களாக அதிக மின் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால், அடிக்கடி மின் சாதனங்கள் பழுதாகி வருவதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரி வித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சரியான அளவு மின் சாரம் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.