உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில் இடத்தில் சாலை போட முயற்சி கிராம மக்களுடன் இந்து முன்னணி புகார்

கோவில் இடத்தில் சாலை போட முயற்சி கிராம மக்களுடன் இந்து முன்னணி புகார்

விருத்தாசலம் : கோவில் இடத்தில் பாதை கேட்டு ஆளுங்கட்சி பிரமுகர்கள் உதவியுடன் மிரட்டுவதாக கிராம மக்கள் புகார் மனு கொடுத்ததால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அடுத்த முடப்புளி கிராம மக்கள், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் தாசில்தார் உதயகுமாரிடம் மனு கொடுத்தனர். அதில்,பெரியாண்டவர் கோவில் சர்வே எண்.21ல் அமைந்துள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள நிலங்களின் உரிமையாளர்கள் கோவில் வழியாக வந்து செல்கின்றனர். தனிநபர் ஒருவர் அவர் இடத்திற்கு செல்ல கோவில் நிலத்தில் ரோடு போட வேண்டும் தகராறு செய்து வருகின்றார். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் கோவில் இடத்தில் தனி நபருக்கு வழி தர முடியாது என தீர்ப்பும் பெற்றுள்ளோம்.ஆனால், சம்பந்தப்பட்ட தனிநபர் அரசியல் பிரமுகர்கள் மூலமாக மிரட்டி வருகின்றார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் கூறுகையில், '150 ஆண்டுகளாக வழிபட்டு வரும் கோவிலில் பாதை கேட்டு தனிநபர் அரசியல் மிரமுகர்களை வைத்த மிரட்டுகின்றனர்.முதற்கட்டமாக தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளோம். மிரட்டல் தொடர்ந்தால் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். தர்மகர்த்தா அருள்மணி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !