உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இந்து முன்னணி செயற்குழு கூட்டம்

இந்து முன்னணி செயற்குழு கூட்டம்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த எல்.என்.புரத்தில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சனில்குமார் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பாளர் ராஜேஷ், முன்னாள் நகராட்சி துணை சேர்மன் விஜயரங்கன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தனர். கூட்டத்தில் இந்து முன்னணியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், மணிகண்டன், மாவட்ட செயற்குழு ரவிச்சந்திரன், நகர தலைவர் வினோத், பொதுச் செயலாளர் மருது மதியழகன், நகர செயலாளர்கள் சங்கர், கார்த்திக், வினோத் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி