உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை 

கடலுார் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை 

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு:வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப் பெற்றுள்ளது. இதற்கு 'பெஞ்சல்' என பெயரிடப்பட்டுள்ளது. புயல் இன்று (30ம் தேதி) பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று (30ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ