/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு காவிரியிலிருந்து வந்திருந்த புனிதநீர்
பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு காவிரியிலிருந்து வந்திருந்த புனிதநீர்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கும்பாபிஷேகத்திற்கு, பொதுதீட்சிதர்கள் சார்பில் தலைக் காவிரியிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள, தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் , அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் 29-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்க உள்ளது. கும்பாபிஷேகத்திற்காக கோவில் பொதுதீட்சிதர்கள் சார்பில் தலைக்காவிரியிலிருந்து காவிரி புனிதநீர் பூஜை செய்து நேற்று நடராஜர் கோவிலுக்கு மேளதாளங்களுடன் கொண்டு வரப்பட்டது. பின்னர் தேவசபையில் வைத்து தில்லைகோவிந்தராஜப் பெருமாள் கோவில் டிரஸ்டிகளிடம், கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவசுந்தர தீட்சிதர் வழங்கினார். நிகழ்ச்சியில் பட்டு தீட்சிதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.