உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவாத்து பயிற்சி நிறைவு

ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவாத்து பயிற்சி நிறைவு

கடலுார்; ஊர்க்காவல் படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அடிப்படை கவாத்து பயிற்சி நிறைவு விழா நடந்தது.கடலுார் மாவட்ட ஊர்க்காவல் படையில் தேர்வு செய்யப்பட்ட, 20 ஊர்க்காவல் படையினர் 45 நாட்கள் அடிப்படை கவாத்து உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு நேற்று நிறைவு பெற்றது.இதற்கான நிறைவு விழா கடலுார் ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது. இதில், பயிற்சி முடித்த ஊர்க்காவல் படைவீரர்களின் அணிவகுப்பு மரியாதையை எஸ்.பி., ராஜாராம் ஏற்று கொண்டார். பின், பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட நபர்களுக்கு பதக்கம் வழங்கி பேசியதாவது:காவல் பணி சவால்கள் நிறைந்த பணி, ஊர்காவல் பணியில் இடர்பாடுகள் இருந்தாலும் கடலுார் மாவட்ட ஊர்க்காவல் படையினர் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ஊர்க்காவல் படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீங்கள் இலக்குகளை அடைய செயல்திட்டங்களை வகுத்து பாரபட்சம் இல்லாமல் பணி மேற்கொள்ள வேண்டும் என்றார்.இதை தொடர்ந்து, ஊர்க்காவல் படையில் 20 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர்களுக்குசான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.அப்போது, டி.எஸ்.பி., ரூபன்குமார், விழுப்புரம் சரக உதவி தளபதி கேதர்நாதன்,வட்டாரத் தளபதி அம்ஜத்கான், துணை வட்டார தளபதி கலாவதி, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அருட்செல்வன், ஊர்க்காவல் படை சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை