மேலும் செய்திகள்
பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
29-Sep-2024
கடலுார்: கடலுார் மாவட்ட பெருமாள் கோவில்களில், புரட்டாசி 3ம் சனிக்கிழமையொட்டி, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.கடலுார் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5:00 மணி முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனர். புதுப்பாளையம் ராஜகோபாலசுவாமி கோவில், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவில், வில்வநகர் ஆட்கொண்ட வரதராஜபெருமாள் கோவில், எஸ்.பி.,அலுவலகம் அருகிலுள்ள கஜேந்திர வரதராஜபெருமாள் கோவில் உட்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்ததுஅதே போன்று, பரங்கிப்பேட்டை ஸ்ரீ தேவி, பூமி தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், மூலவர், திருப்பதி சீனிவாச பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரில் உள்ள செங்கமல தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலில், பத்மாவதி தாயார் சமேத திருவேங்கடமுடையான் திருக்கோலத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், மூலவர் பாமா ருக்குமணி சமேதராய் திருவந்திபுரம் தேவநாதசுவாமி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.இதேபோன்று மாவட்டம் முழுவதும் பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
29-Sep-2024