மேலும் செய்திகள்
குடும்ப தகராறு கணவர் தற்கொலை
30-Aug-2025
பண்ருட்டி : பண்ருட்டி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்,41; இவரது மனைவி முத்துலட்சுமி, 40;மணிகண்டன் குடிபழக்கம் உள்ளவர். குடிபோதையில் மனைவியுடன் சண்டைபோட்டுக்கொண்டு வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Aug-2025