கணவன் மாயம் மனைவி புகார்
பண்ருட்டி ; வேலைக்கு சென்ற கணவரை காணவில்லை என மனைவி புகார் செய்துள்ளார்.பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்அன்பரசன், 38; இவரது மனைவி சூர்யா, 30; இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகிறது.இவர்களுக்கு ஆன்ட்ரோஸ், 5; ரோஷல், 2; ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 28ம் தேதி கடலுாருக்கு பெயிண்டிங் வேலைக்கு சென்றவர் அருள்அன்பரசன் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. சூர்யா புகாரி ன்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து அருள்அன்பரசனை தேடி வருகின்றனர்.