உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

பண்ருட்டி : பண்ருட்டி அருகே கணவரை காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.பண்ருட்டி அடுத்த பெரியகள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஷா என்கிற பத்மநாபன், 45; இவரது மனைவி கவிதா, 35;பத்மநாபன் சில மாதங்களாக சற்று மனநலம் பாதத்தவர் போல் பேசி வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 10ம் தேதி கவிதா மேல்மருவத்துார் கோவிலுக்கு சென்று வந்து பார்த்த போது பத்மநாபனைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து கவிதா அளித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ