மேலும் செய்திகள்
அரசியலமைப்பு நாள் என்.எல்.சி.,யில் அனுசரிப்பு
28-Nov-2024
நெய்வேலி; என்.எல்.சி., நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையப்பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஐ.ஜி., சரவணன் ஆய்வு செய்தார்.என்.எல்.சி.,யின் 4 பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள், 4 அனல்மின் நிலையங்கள் மற்றும் என்.எல்.சி., தலைமை அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், என்.எல்.சி.,யின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நேற்று மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஐ.ஜி. சரவணன் நேரில் ஆய்வு செய்தார். அவரை, என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி தலைமையில் மனிதவளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப், , மின்துறை இயக்குநர் வெங்கடாசலம், என்.எல்.சி., விஜிலென்ஸ் துறையின் முதன்மை அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன், மத்திய தொழிaலக பாதுகாப்பு படையின் நெய்வேலி பிரிவு டி.ஐ.ஜி., சிவக்குமார் மற்றும் சீனியர் கமாண்டர் நவ்தீப் சிங் ஹீரா வரவேற்றனர். அதனை தொடர்ந்து என்.எல்.சி.,யில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
28-Nov-2024