உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற இருளர் மக்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற இருளர் மக்கள் கோரிக்கை

கடலுார்: அரசு வழக்கிய வீட்டுமனை பட்டா இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றக்கோரி, இருளர் சமுதாய மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.பண்ருட்டி தாலுகா, திருக்குளம் இருளர் சமுதாய பொதுமக்கள் கொடுத்துள்ள மனு:பண்ருட்டி தாலுகாவில் உள்ள இருளர் சமுதாயத்தை சேர்ந்த 93 குடும்பத்தினருக்கு காடாம்புலியூர் ராஜகணபதி நகரில் அரசு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் நான்கு கூரை வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தற்போது வீடு கட்டுவதற்கு எங்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், நாங்கள் ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்யுமாறு கேட்டதற்கு, மிரட்டுகின்றனர்.எனவே, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றவும், அங்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி