உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுகாதார நிலைய கட்டடம் திறப்பு விழா

சுகாதார நிலைய கட்டடம் திறப்பு விழா

நடுவீரப்பட்டு; பாலுாரில் புதிதாக கட்டப்பட்ட அரசு துணை சுகாதார நிலைய கட்டடம் திறப்பு விழா நடந்தது. பண்ருட்டி அடுத்த பாலுாரில் 2023-2024 ஆண்டு மாவட்ட அறக்கட்டளை நிதி 30 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சுகாதார நிலையம் அருகில் உள்ள குழந்தைகள் மையத்தில் இயங்கி வந்ததால், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை திறக்க கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது. விழாவில் அண்ணாகிராமம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கீழ்அருங்குண சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஆறுமுகம், டாக்டர் நவீனா, சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், பாலாஜி, பகுதி சுகாதார செவிலியர் சந்திரா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை