உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் கண்ணங்குடி சாலையில் ஆருத்ரா திருமண மண்டம் திறப்பு

சிதம்பரம் கண்ணங்குடி சாலையில் ஆருத்ரா திருமண மண்டம் திறப்பு

புவனகிரி : சிதம்பரம் புறவழிச்சாலை அருகில் கண்ணங்குடியில் பழனிச்சாமி-சுமித்திரா தம்பதியினரால் முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஆருத்ரா புதிய திருமண மண்டபம் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று காலை நடந்தது.அஸ்வின், அபினவ், ஆருத்ரா வரவேற்றனர். புதிய திருமண அரங்கை மத்திய ஐரோப்பா நாட்டைச் சேர்ந்த செக் குடியரசு சுற்றுலா குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ரேடக் குளாண்ட், பீட்டர், ஏரோஸ்லாங், பவல் குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர்.பழனிச்சாமி -சுமித்ரா உறவினர்கள் ரத்தினம்பாள், அய்யாசாமி, ராஜதுரை குத்துவிளக்கேற்றி வைத்தனர். நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., சிந்தனைச்செல்வன், அகத்தியம் பவுண்டேஷன் நிர்வாகி ஈஸ்வர் ராஜலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் நெடுஞ்செழியன், ஞானசந்திரன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் அம்பிகாபதி, ஜெயராமன், ஆசிரியர் சதீஷ்குமார் உள்ளிட்ட தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் நேரில் பங்கேற்று வாழ்த்தினர்.உறவினர்கள் வெற்றிவேந்தன்,செல்வகுமார் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ