உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முத்தையவேள் ஆய்வரங்கம் பல்கலையில் துவக்கம்

முத்தையவேள் ஆய்வரங்கம் பல்கலையில் துவக்கம்

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை சார்பில் அரசர் முத்தையவேள் ஆய்வரங்கத் துவக்க விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் கதிரேசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தமிழியல் துறைத் தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். இந்திய மொழிப்புல முதல்வர் பாரி முன்னிலை வகித்தார். சிறப்பு சொற்பொழிவாளராக சொக்கலிங்கம் பங்கேற்று, 'எண்ணுக தமிழில், எழுதுக தமிழில்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவில், இணைவுக் கல்லுாரியின் கல்வி வளர்ச்சிக்குழு ஆலோசகர் கண்ணப்பன், புல முதல்வர்கள் கார்த்திகேயன், ஸ்ரீராம், விஜயராணி, அருள்செல்வி, குலசேகரப்பெருமாள், துணைத் தலைவர் தமிழினியன் மற்றும் அரவிந்தபாபு, பத்மநாபன், பாலமுருகன், அருள், ஜெகநாதரெட்டி, சரண்யா, நூலகர் சிவராமன், துணைநூலகர் பாலகிருஷ்ணன், பேராசிரியர்கள் செந்தில்குமார், சதாசிவம், கணபதிராமன், பாலு, அன்பு அரசன், மணி, இரவி மற்றும் பலர் பங்கேற்றனர்.ஆய்வரங்க அமைப்பாளர் கல்பனா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை