உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீர்த்தபுரீஸ்வரர் கோவில் திருப்பணி துவக்கி வைப்பு

தீர்த்தபுரீஸ்வரர் கோவில் திருப்பணி துவக்கி வைப்பு

திட்டக்குடி: திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவில் திருப்பணியை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் துவக்கி வைத்தார். திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தீர்த்தபுரீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலை திருப்பணி செய்ய வேண்டும் என பக்தர்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1 கோடியே 41லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, திருப்பணியை நேற்று முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதனையொட்டி கோவிலில் நடந்த விழாவில், கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி முன்னிலையில், செயல் அலுவலர் மகாதேவி குத்துவிளக்கேற்றி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி