விருத்தாசலம்: விருத்தாசலத்தில் உள்ள செராமிக் தொழிற்பேட்டையில், 200க்கும் மேற்பட்ட செராமிக் கம்பெனிகள் உள்ளன. இந்த செராமிக் கம்பெனிகளில் நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 டன் வரை அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், பொம்மை, டீ கப், வாட்டர் பில்டர், எலக்ரிக் ஹீட்டர், சுவாமி சிலைகள், பறவைகள், இயற்கை காட்சி பொருட்கள், சானிட்டரி பொருட்கள் மற்றும் ரெப்ராக்டரீஸ் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனை உற்பத்தி செய்யும் பணியில், வட மாநில தொழிலாளர்கள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் அகல் விளக்குகள் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட வெ ளி மாநிலங்களுக்கும், கனடா, ஓமன், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ப்படுகின்றன. இந்நிலையில், வரும் டிசம்பர், 3ம் தேதி கார்த்திகை தீபம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இ தனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக உற்பத்தி செய்த அகல் விளக்குகள் உலர வைக்க முடியாமல் தொழிலாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஒருசிலர் மட்டும் ஈரப்பதமான அகல் விளக்குகளை, பெரிய ஹாலில் பரவலாக கொட்டி, ரட்சத பேன்களின் துணையுடன், மரக்கரி துண்டுகளை, ஒரு பாண்டில் கொட்டி எரித்து, உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.