ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது காயமடைந்த மாணவர் பகீர் தகவல்
கடலுார் : பள்ளி வேன் ரயில்வே பாதையை கடக்கும் போது கேட் திறந்த நிலையில் தான் இருந்தது என காயமடைந்த மாணவர் விஸ்வேஸ் கூறினார். கடலுார் அடுத்த செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் பாசஞ்சர் ரயில், பள்ளி வேன் மீது மோதியதில் 3 மாணவர்கள் 2 மாணவர்கள், ஒரு மாணவி என மொத்தம் 3 பேர் இறந்தனர். விபத்தில், படுகாயடைந்த 10ம் வகுப்பு மாணவர் விஸ்வேஸ் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து விஸ்வேஸ் கூறுகையில், 'பள்ளி வேனில் நான் பின்புற சீட்டில் அமர்ந்திருந்தேன். ரயில்வே கேட்டை வேன் நெருங்கும் போது கேட் திறந்துதான் இருந்தது. சிக்னல் எதுவும் போடவில்லை. ரயில் வரும் சத்தமும் கேட்கவில்லை. ரயில்வே கேட்டை கடக்கும் போதுதான் ரயில் மோதியது. நான் வேனில் இருந்து துாக்கி எறியப்பட்டேன். எல்லாமே ஒரு நொடியில் நடந்து விட்டது' என்றார்.