டி.எஸ்.பி.,யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இன்ஸ்., அதிரடி மாற்றம்
கடலுார்: கடலுார் மாவட்டம், விருத்தாசலம் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜாராமன் உள்ளார். நேற்று வழக்கம்போல், விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்களிடையே 'வாட்ஸ்அப்' குரூப்பில் ரோல் கால் பேசினார். அப்போது, பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் பங்கேற்கவில்லை. இதுகுறித்து டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டரிடம் ஏன் பங்கேற்கவில்லை என கேட்டுள்ளார். அதற்கு நான் குரூப் காலில் இருந்தேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து, டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், எஸ்.பி., ஜெயக்குமாரிடம் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜாராமனை, ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார். இதையறிந்த இன்ஸ்பெக்டர் ராஜாராமன் உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.