குடிநீர் இணைப்பு வைப்பு தொகை செலுத்த அறிவுறுத்தல்
மந்தாரக்குப்பம், : கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிகளில் அனுமதி பெறமால் குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்கள் டிபாசிட் தொகையை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலக செய்திக்குறிப்பு: கெங்கைகொண்டான் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் இணைப்பு தேவைப்பட்டால் உரிய ஆவணங்களுடன் கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தால் குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்கப்படும். மேலும், பேரூராட்சியில் அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்கள் டிபாசிட் தொகை செலுத்தி அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை முறைபடுத்தி கொள்ள வேண்டும்.தவறும் பட்சத்தில் பேரூராட்சி மூலம் குடிநீர் இணைப்புகளை துண்டிப்பு செய்வதுடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.