| ADDED : நவ 22, 2025 05:48 AM
சிதம்பரம்: சிதம்பரத்தில் உள்ள மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு திட்ட உதவி மையம் மற்றும் ரத்தசோகை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் திட்டத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார். சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலுார் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவ காப்பீட்டு திட்ட உதவி மையம் திறப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் திருப்பதி தலைமை தாங்கினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தல்குமார் பங்கேற்று, மருத்துவ காப்பீடு திட்ட உதவி மையத்தை திறந்து வைத்தும், மகளிருக்கான இரத்த சோகை கண்டறிந்து, சிகிச்சை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, மாணவிகளுக்கு சிறப்பு உணவு பொருட்கள் அடங்கிய பெட்டக தொகுப்பை வழங்கினார். நிகழ்வில் சிதம்பரம் சப் கலெக்டர் கிஷண்குமார், பயிற்சி கலெக்டர்கள் மாலதி, ஜார்ஜ், டியுக் பார்க்கர், மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மணிமேகலை, மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி, மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ், கல்லுாரி துணை முதல்வர்கள் பாலாஜி சுவாமிநாதன், சசிகலா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மருத்துவ கல்லூரி சமூக மருத்துவ துறை தலைவர் கல்யாணி நன்றி கூறினார்.