உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்; கலெக்டர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்; கலெக்டர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.கடலுார் மாவட்டத்தில் 2023 அங்கன்வாடி மையங்கள் மூலம் பிறந்த குழந்தை முதல் 6 மாதம் குழந்தை வரையிலுள்ள 8,880 குழந்தைகளுக்கு இணையுனவும், 6 மாதம் முதல் 3 வயது வரையுள்ள 61,535 குழந்தைகளுக்கு முட்டை யுடன் இணையுனவும், 3 வயது முதல் 6 வயது வரையுள்ள முன்பருவ கல்வி பயிலும் 34,172 குழந்தைகளுக்கு இணையுனவுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1,04,587 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், 10,223 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 9,405 பாலுாட்டும் தாய்மார்களுக்கு இணை உணவு வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு வண்ண சீருடைகள் வழங்கப்படுகின்றன. அங்கன்வாடி பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை குறித்தும் அவர்கள் முறையாக சரியான நேரத்தில் தடுப்பூசி, உணவு முறை, இணை உணவு வழங்கப்படும் விவரங்கள் குறித்தும், குழந்தைகளுக்கு விளையாட்டு முறையில் கல்வி கற்பிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நடைமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகளின் நலனை மிகுந்த கவனத்துடன் கண்காணித்து குழந்தைகளை பராமரித்திட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) செல்வி, அனைத்து வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ